தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியர்

27th Mar 2021 02:42 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டிருப்பதாக ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி  ரவிக்குமார் சனிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர், காஞ்சிபுரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு  தொகுதிகளிலும் மொத்தம் 241 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இம்மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூரிலும், உத்தரமேரூரிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 15க்கு மேல் இருப்பதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு மகளிர் வாக்குச்சாவடி மையமாக செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 4 பெண்கள் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பெண்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் அவர்களும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அஞ்சல் வாக்கும் அளிக்கலாம். வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாக வாக்களிக்க ஏதுவாகவும் வாக்குச்சாவடி மையங்களில் உரிய பாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் நடக்க முடியாதவர்களாக இருந்தால் அவர்கள் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
 

Tags : kancheepuram election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT