தமிழ்நாடு

சிசிடிவி மூலம் தபால் வாக்குகளைப் பாதுகாக்க வேண்டும்: நீதிமன்றம்

26th Mar 2021 12:07 PM

ADVERTISEMENT

அஞ்சல் வாக்குகளைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்கு செலுத்தும் முறையில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், எந்த குற்றச்சாட்டுக்கும் இடம் தராத வகையில் அஞ்சல் வாக்குப் பதிவு நடைமுறை இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், 29-ம் தேதிக்குள் அஞ்சல் வாக்கு அளிப்போரின் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், தபால் வாக்காளர்களின் பட்டியல் வேட்பாளருக்கு வழங்கிய 24 மணி நேரத்துக்கு பிறகே அஞ்சல் வாக்கு பெற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,

அஞ்சல் வாக்குகளில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கையெழுத்து பெறும் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT