தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வர் நான்தான்: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

26th Mar 2021 07:20 PM

ADVERTISEMENT

புதுச்சேரி முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 
புதுவை மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக- அதிமுக- பாமக ஆகிய கட்சிகளும், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ்-திமுக-இந்திய கம்யூனிஸ்ட்- விசிக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. 
இந்த நிலையில், புதுவையில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அண்மையில் வெளியாகின. அதில் சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் கருத்துக் கணிப்பிலும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கருத்து கணிப்பிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 
இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் தான்தான் என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதுச்சேரி முதல்வர் நான்தான், யாருக்கும் சந்தேகம் வேண்டாம். மக்கள் வாழ்க்கை நிலையை உயர்த்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியமைக்க வாக்களிக்க வேண்டும். 
புதுச்சேரியை காப்பாற்ற நல்ல கூட்டணி வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக உள்ளிட்டவற்றுடன் கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார். 

Tags : puducherry
ADVERTISEMENT
ADVERTISEMENT