தமிழ்நாடு

தேர்தல் ஏற்பாடு: அரசியல் கட்சிகளுடன் சத்யபிரத சாஹு இன்று ஆலோசனை

26th Mar 2021 12:42 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT