தமிழ்நாடு

திமுக எந்த  மதத்திற்கும் எதிரானது அல்ல: மு.க. ஸ்டாலின் பேச்சு

26th Mar 2021 12:42 PM

ADVERTISEMENTதிருச்சி :  ஒன்றே குலம் ஒருவனே தேவன். திமுக எந்த  மதத்திற்கும் எதிரானது அல்ல என்று ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பி்ட்டார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி ராஜகோபுரம் முன்பு மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான ஸ்ரீரங்கம் பழனியாண்டி, மணப்பாறை அப்துல் சமத், மண்ணச்சநல்லூர் கதிரவன், துறையூர் ஸ்டாலின் குமார், திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேற்கு கே.என் நேரு, முசிறி காடுவெட்டி தியாகராஜன், லால்குடி சௌந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது: உங்களை நாடி தேடி வந்துள்ளேன்.  மத சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். தேர்தலுக்காக மட்டும் உங்களை சந்திக்க வரவில்லை.

உங்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய சுக துக்க நிகழ்ச்சிகளில்  பங்கு கொள்வேன். ஒன்றே குலம் ஒருவனே தேவன். திமுக எந்த  மதத்திற்கும் எதிரானது அல்ல.
நடைபெறவுள்ள தேர்தலில் திமுக சிறப்பான வெற்றி பெறும்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் 2 கோடி பேருக்கு வேலை தருவோம் எனக் கூறினர். வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து இந்திய மக்களுக்கு தலா ரூ.15 லட்சம் வங்கியில் போடப்படும் என அறிவித்தார்கள். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ADVERTISEMENT

இதுபோல்  அதிமுக அரசு, இலவச செல்லிடப்பேசி, பால் லிட்டருக்கு ரூ .25 வழங்கப்படும் என அறிவித்ததோடு சரி செயல்படுத்தவில்லை.அதிமுக தங்கள் ஆட்சியில் என்ன செய்து கிழித்தது? ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியையும் ஆட்சியும் காப்பாற்றுவதையே அவர்கள் நேரத்தை செலவிட்டார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆட்சியைக் கைப்பற்ற நினைத்த ஓபிஎஸ்  முதல்வரின் நினைவிடத்தில் தர்மயுத்தம் மேற்கொண்டார்.

இந்நிலையில், சசிகலா ஜெயிலுக்கு சென்று விட்டார். பாஜக தலையிட்டு எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சமரசம் செய்து வைத்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் ஆட்சியில் பங்கு போட்டுக்கொண்டனர். 

ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சமீபத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ் சசிகலாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி சசிகலாவை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழக அரசு பாஜகவிடம் அடிமையாக இருந்து தமிழத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார்கள்.

கருணாநிதியின் மகனாக கூறுகிறேன் திமுக சொன்னதை தான் செய்யும். செய்வதைச் சொல்வோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி மாவட்டத்திற்குரிய திட்டங்களான உயர் சிறப்பு மருத்துவமனை, மெட்ரோ ரயில், மலைக்கோட்டை ரோப் கார் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவோம்.

பாஜக அரசு 3 புதிய வேளாண் திட்டங்களை சர்வாதிகாரத்தனமாக கொண்டு வந்துள்ளது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால்  எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை தரகர்கள் என கொச்சைபடுத்துகிறார்.

நான் தான் ஆட்சிக்கு வருவேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அவ்வாறு ஆட்சிக்கு வந்ததும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே முதல் தீர்மானமாக இருக்கும்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போடப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன்னுக்கு ரூ.4500  வழங்கப்படும்.

அனைத்து வேளாண் பொருள்களுக்கும்  குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் அறிவியல் மையம், விவசாயிகளுக்கு  இலவச மும்முனை மின்சாரம், விவசாய கடன் தள்ளுபடி வழங்கப்படும். முதலில் தமிழக அரசின் திமுக ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை வரிசைப் படுத்திப் பேசினார்.

கரோனா இரண்டாவது அலை: கரோனா இரண்டாவது அலை வீச உள்ளது. அதனால் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். குறிப்பாக கூட்டத்தில் பங்கேற்போர் முகக் கவசம் அணிய வேண்டும். அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் தற்போது மீண்டும் கரோனா பரவுகிறது.  இதனை தடுக்க  தமிழக அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகிறது? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT