சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் அரசு வட்டார சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்பு தினத்தையொட்டி பேளூர் வட்டார ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடைபெற்ற காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், பயனாளிகள் பலரும், காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வில், காசநோய் கண்டறியும் வழிமுறைகள், கட்டுப்பாடு மற்றும் இலவச சிகிச்சை முறைகள் குறித்து, மருத்துவர்கள் லட்சுமணன், ராகுல், சியாம், சங்கர், செவிலியர்கள் தீபா, கவிதா, அபிநயா, நம்பிக்கை மைய பணியாளர்கள் விசுவநாதன், சசிகலா ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.