சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பெறும் பணி இன்று (மார்ச் 25) காலை சென்னையில் தொடங்கியது.
சென்னையில், 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் 31-ம் தேதி வரை 7 நாள்களுக்கு அஞ்சல் வாக்குகள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் ஒரு குழு 15 தபால் வாக்குகளை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று பெறுவார்கள்.
சென்னையில் 80 வயதானவர்கள் 6,992 பேர், மாற்றுத் திறனாளிகள் 308 பேர் என மொத்தம் 7300 பேர் அஞ்சல் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.