தமிழ்நாடு

மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி 

25th Mar 2021 03:56 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வியாழக்கிழமை மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். 

மானாமதுரை அருகே மேல நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் ஆறுமுகம்(50), விவசாயியான இவர் மானாமதுரை அருகே செய்களத்தூர் கிராமத்தில் உள்ள வயல் காட்டில் வாழை மரம் வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பி ஆறுமுகம் மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ADVERTISEMENT

மானாமதுரை சிப்காட் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT