தமிழ்நாடு

அருப்புக்கோட்டை: ஆடைகளுக்கு இஸ்திரி செய்து அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

25th Mar 2021 06:28 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை தெற்குத்தெருவில் ,அப்பகுதியிலிருந்த வீடு வீடாகச்சென்று வாக்குகள் சேகரித்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்குத்தெரு, குமரன்புதுத்தெரு,நாகலிங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிக்கச்சென்ற அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் அங்கிருந்த தொழிலாளியின் இஸ்திரிப்பெட்டியை வாங்கி தானே இஸ்திரி செய்து நூதன முறையில் அப்பகுதியினரிடையே  வாக்குகள் சேகரித்தார்.

அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத்தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் வைகைச்செல்வன் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனிடையே வியாழக்கிழமை அருப்புக்கோட்டை நகரிலுள்ள 31 மற்றும் 28வது வார்டுகளைச் சேர்ந்த தெற்குத்தெரு, குமரன் புதுத்தெரு, நாகலிங்கா நகர் ஆகிய பகுதிகளில்  நேரில் வீடு வீடாகச்சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

அப்போது தெற்குத்தெருவில் இருந்த ஒரு பகுதியில் தள்ளுவண்டியில் ஒரு தொழிலாளி துணிகளுக்கு இஸ்திரி செய்வதைப் பார்த்த அவர், அவரிடமிருந்த இஸ்திரிப்பெட்டியை வாங்கி தானே அவ்வண்டியிலிருந்த துணிகளுக்கு இஸ்திரி செய்தார். பின்னர் அப்பகுதி குடியிருப்புகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவ்விதமாக ஒவ்வொரு நாளும் தான் பிரசாரம் செய்யும் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபட்ட முறையில் வைகைச்செல்வன் பிரசாரம் செய்துவருகிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT