தமிழ்நாடு

சால்வை, பூங்கொத்து வேண்டாம்: டிடிவி தினகரன் வேண்டுகோள்

22nd Mar 2021 01:42 PM

ADVERTISEMENT

 

கரோனா இரண்டாவது அலை நெருங்குவதால் கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைந்து மக்களிடம் இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளிடையே கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கரோனா பரிசோதனை, கரோனா தடுப்பூசி என மாநிலங்கள், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

ADVERTISEMENT

'கரோனா இரண்டாவது அலை நெருங்குகிறது: பொதுமக்களும் போதிய விழிப்போடு இருக்க வேண்டும்! கழக உடன்பிறப்புகள் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

Tags : கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT