தமிழ்நாடு

பிரதமர் மோடி மார்ச் 30-இல் தமிழகம் வருகை

22nd Mar 2021 07:11 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30-ம் தேதி தமிழகம் வருகிறார்.

பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எல். முருகன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. முன்னதாக, கடந்த மாதம் புதுச்சேரி மற்றும் கோவை மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : pm modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT