தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜுக்கு கரோனா

22nd Mar 2021 09:38 AM

ADVERTISEMENT

சென்னை அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அவர் தனது முகநூலில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 4 நாள்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 
இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி. 
நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன். 
ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, யூடியூப் மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
ஜூம் மீட்டிங் மூலம் நான் அண்ணா நகர் தொகுதி மக்களோடு கலந்துரையாட ஏற்பாடுகள் கூடிய விரைவில் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கோவையில் கடந்த வெள்ளிக்ழிமை ம.நீ.ம. தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டபோது உடனிருந்தவர் பொன்ராஜ். ம.நீ.ம. வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ்பாபு ஏற்கெனவே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2ஆவது வேட்பாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coroanvirus Makkal Needhi Maim
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT