தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: மு.க.ஸ்டாலின்

22nd Mar 2021 12:27 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்களான கீதாஜீவன் (தூத்துக்குடி), அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), ஜீ.வி. மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), எம்.சி. சண்முகையா (ஓட்டப்பிடாரம்), காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் (ஶ்ரீவைகுண்டம்), மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சீனிவாசன் (கோவில்பட்டி) ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடி சிதம்பர நகரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றால் போல வேலையை தமிழக அரசு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். 

திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு சரியான வேலை வழங்கப்படும் என்று தெரிவித்த மு,க. ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவமுமே எடுத்துக் காட்டு எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT