தமிழ்நாடு

நான் வருமான வரி சோதனைகளுக்கு அஞ்சுபவன் அல்ல: கமல் ஆவேசம்

22nd Mar 2021 06:03 PM

ADVERTISEMENT

 

கோவை: நான் வருமான வரி சோதனைகளுக்கு அஞ்சுபவன் அல்ல என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

மநீம தலைவர் கமல் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திங்களன்று அங்கு செய்தியாளர்களைச்  சந்தித்த  கமல் கூறியதாவது:

நான் வருமான வரி சோதனைகளுக்கு அஞ்சுபவன் அல்ல; என் வீட்டில் சோதனையிட்டால் மத்திய நிறுவனங்களுக்கு எதுவும் கிடைக்காது,

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசானது தங்களது அரசியல் எதிரிகளை மத்திய வரி நிறுவனங்களைப்  பயன்படுத்தி மிரட்டுகிறது.

என்னையும் அதுபோல மிரட்டுகிறார்கள்; ஆனால் நான் எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மநீம  பொருளாளர் சந்திரசேகரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் சுமார் ரூ. கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT