தமிழ்நாடு

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேருக்கு கரோனா

22nd Mar 2021 02:30 PM

ADVERTISEMENT


சென்னையில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூன்று கிளைகளில் பணியாற்றும் 40 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில், ஒரு தனியார் நிறுவனத்தின் கிளைகள் பெருங்குடி, தரமணி, கந்தன்சாவடியில் இயங்கி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களிலும் பணியாற்றும் சுமார் 40 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT