தமிழ்நாடு

100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கரோனா: ராதாகிருஷ்ணன்

22nd Mar 2021 02:32 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் முன்பு நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு கரோனா பேரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தகுதியானவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், 10 நாள்களுக்கு முன்பு வரை 100 பேரை பரிசோதித்தால் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது 100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது. எனவே கரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது  என்று சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : Radhakrishnan coronavirus chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT