தமிழ்நாடு

திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

17th Mar 2021 04:48 PM

ADVERTISEMENT

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவும் திமுக வேட்பாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின்போது திமுக எம்.பி. கனிமொழி மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர். 

திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியனும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். 

திருச்செந்தூர் தொகுதியில்  திமுக சார்பில், ஐந்து முறை தொடா்ந்து வெற்றி பெற்ற அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தற்போதைய தோ்தலிலும் திமுக சாா்பில் 6-ஆவது முறையாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT