தமிழ்நாடு

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடும் உயர்வு

17th Mar 2021 11:22 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,135 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 352 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 277 பேரும் கோடம்பாக்கத்தில் 217 பேரும் அண்ணாநகரில் 250 பேரும் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.

அண்ணாநகரில் மட்டும் நேற்று 216 ஆக இருந்த நோயாளிகள் எண்ணிக்கை இன்று 250 ஆக உயர்ந்துள்ளது. இதுபோலவே மற்ற மண்டலங்களிலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் குறைவான கரோனா நோயாளிகள் இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில மண்டலங்களில் பாதிப்பு 200க்கும் அதிகமாக உயர்ந்து, தற்போது 300-ஐ நெருங்கி வருகிறது.

இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,39,483 ஆக உள்ளது. அவர்களில் 2,33,166 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 4,182 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.

மார்ச் 16: 352 
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 12: 265
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 06: 243
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 03: 184
மார்ச் 02: 167
மார்ச் 01: 171

தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 5,450 ஆக அதிரித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT