தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை 3.5 கோடியைக் கடந்தது

17th Mar 2021 03:49 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 3.5 கோடியைக் கடந்தது: நேற்று ஒரே நாளில் 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கரோனா ஒரு நாள் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 71.10 சதவீதம் பேர், மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரத்தில் மட்டும் 17,864 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் 1,970 பேருக்கும், பஞ்சாப்பில் 1,463 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் கரோனா சிசிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 2.34 லட்சமாக உள்ளது.
 
இன்று காலை 7 மணி வரை 3.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 1,15,89,444 பேர். 60-வது நாளான நேற்று 21 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு (21,17,104) தடுப்பூசி போடப்பட்டது.

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,10,45,284-ஐ தொட்டது. இது 96.56 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர் உயிரிழந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT