தமிழ்நாடு

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 என்பது உண்மையல்ல

17th Mar 2021 12:00 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 என்று கூறப்பட்டிருந்தது உண்மையல்ல என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 2019 - 20-ஆம் நிதியாண்டில் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 என்று எழுதப்பட்டிருந்தது. இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு அரசியல் கட்சின் தலைவராக செயல்படுபவரின் ஆண்டு வருமானமே ரூ.1000 என்றால் எப்படி? என்று பல்வேறு கேள்விகளும் எழுந்தன.

இந்த நிலையில், அது உண்மையல்ல என்றும், எழுத்துப்பிழை என்றும் சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் சீமானின் ஆண்டு வருமானம் பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

Tags : seeman
ADVERTISEMENT
ADVERTISEMENT