தமிழ்நாடு

காங்கயத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

17th Mar 2021 04:17 PM

ADVERTISEMENT

 

காங்கயத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சிவானந்தம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொருளாளரான கே.சிவானந்தம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன்போது, நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலர் வ.ப.சண்முகம், கிழக்கு மாவட்ட துணைச் செயலர் ஏ.தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சிவானந்தம், வெள்ளகோவில் பகுதியில் வறண்டு கிடக்கும் வட்டமலைக் கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன், காங்கயம் பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரங்களுக்குப் பதிலாக, மாற்று வழியாக புதைவட கம்பி மூலம் மின்சாரம் எடுத்துச் செல்ல வலியுறுத்துவேன் என்றார்.

Tags : election 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT