தமிழ்நாடு

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் வேட்புமனு

17th Mar 2021 03:14 PM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் போட்டியிடுகிறார். 

அவர், பாளையங்கோட்டை தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கண்ணனிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப. சீதாராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : dmk candidate
ADVERTISEMENT
ADVERTISEMENT