தமிழ்நாடு

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: அரசுப் பேருந்து ஜப்தி

17th Mar 2021 11:47 AM

ADVERTISEMENT

 

விபத்து இழப்பீடு வழங்கப்படாததால், சென்னையில் இருந்து கம்பம் சென்ற அரசு விரைவு பேருந்தை புதன்கிழமை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். 

2018 ஆம் ஆண்டு தேனி - திண்டுக்கல் சாலை காட்ரோடு பகுதியில் பெரியகுளத்தை சேர்ந்தவர் சேக் இப்ராஹிம். கடந்த 2018- ஆம் ஆண்டு தேனி - திண்டுக்கல் சாலை காட்ரோடு பகுதியில் அரசுப் பேருந்து மோதியதில் சேக் இப்ராஹிம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து விபத்தில் பலியான சேக் இப்ராஹிம் குடும்பத்தினர் விபத்து நிவாரணம் கோரி, பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றதில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மீது சத்யா வழக்கு தொடுத்தனர். அதில், கடந்த ஆண்டு விபத்து இழப்பீடாக ரூ.5.72 லட்சம் வழங்க உத்தரவிட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ADVERTISEMENT

எனினும், நிவாரணம் வழங்கப்படாததால் நிறைவேற்றுதல் ஆணை பிறப்பிக்கக் கோரி  சேக் இப்ராஹிம் குடும்பத்தினர் மீண்டும் மனு செய்தாா். அதனடிப்படையில், இழப்பீட்டுக்கு ஈடாக பேருந்தை ஜப்தி செய்ய பெரியகுளம்  கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திலகம் உத்தரவிட்டார். 

அதன்படி, அமீனா ரமேஷ் தலைமையில் பெரியகுளம் பகுதியில் சென்னையில் இருந்து கம்பம் சென்ற அரசு விரைவு பேருந்தை புதன்கிழமை காலை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பிவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT