தமிழ்நாடு

பண்ருட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் மனு தாக்கல்

17th Mar 2021 03:36 PM

ADVERTISEMENT


நெய்வேலி:  பண்ருட்டி சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்  சொரத்தூர் இரா.ராஜேந்திரன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் இரா.ராஜேந்திரன், பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் என்.மங்களநாதனிடம் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 

உடன் பாமக மாநில துணைப் பொதுச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன், பண்ருட்டி அதிமுக நகரச் செயலர் தாடி முருகன் உடன் இருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT