தமிழ்நாடு

இரு சக்கர வாகனம் மீது மணல் லாரி மோதல்: 2 குழந்தைகளுடன் தந்தை பலி

16th Mar 2021 12:40 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மாரிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்(35). இவர் திருவள்ளூரில் இருந்து கிராமத்திற்கு தனது மனைவி சங்கீதா (33), தனது இரு குழந்தைகள் என 4 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திருவள்ளூர் - கடம்பத்தூர் சாலையில் திருப்பாச்சூர் அருகே செல்லும் போது எதிரே வேகமாக வந்த மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜெகதீஷ் மற்றும் அவரது குழந்தைகள் தனுஜாஸ்ரீ (3), தருண் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சம்பவம் அறிந்த திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தை சேரவிடாமல் அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். 
அதைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்த ஜெகதீஷ் மனைவி சங்கீதாவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய காவல்துறையினர், லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT