தமிழ்நாடு

முகக்கவசம் அணியாவிடில் ரூ. 200 அபராதம்: புதுக்கோட்டை ஆட்சியர்

16th Mar 2021 02:01 PM

ADVERTISEMENT

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் 800-க்கும் அதிகமான பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 

இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மீண்டும் தீவிரம் காட்டி வருகின்றன. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதமும் நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ. 5000 அபராதமும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

கரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதிகரித்துள்ளதால் மற்ற மாவட்ட நிர்வாகங்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT