உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் சாலையில் செவ்வாய்க்கிழமை குடிநீர் வராததால் கிராம பொதுமக்கள் உசிலம்பட்டி பேரையூர் சாலை மறியல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி பஞ்சாயத்துக்கு உள்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை வலையப்பட்டி கிராமம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், வருவாய்த் துறை ஆய்வாளர் சுந்தரப்பெருமாள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
பின்னர் சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டனர். இதனால், இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.