தமிழ்நாடு

மேலூர் அருகே தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் - போலீசார் மோதல்

16th Mar 2021 02:45 PM

ADVERTISEMENT

 

மேலூர் அருகே அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது, காவல்துறை வாகனம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது, இதில் காவல்துறை டிஎஸ்பி,ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் எஸ்பி தலைமையில் அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மாவட்ட எல்கை முடிவில் எம்.வெள்ளாபட்டி புதூர் கிராமம் உள்ளது. இங்குள்ள மந்தைதிடல் அருகே அப்பகு தியைச் சேர்ந்த இளைஞர்கள், 5 அடி உய ரம் கொண்ட சிமெண்டால் செய்யப்பட்ட தேவர் சிலை ஒன்றை வைத்தனர். தகவலையடுத்து அங்கு மதுரை மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா, மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்று சம்மந்தப்பட்ட சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சிலையை அங்கிருந்து அகற்றுவது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்,

ADVERTISEMENT

அப்போது சிலர் சிலையை அகற்ற முடியாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர், நேற்று மாலையிலிருந்து நடந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு 1 மணி வரை முடிவு எட்டப்படாமல் தொடர்ந்தது, இதற்டையே போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் முற்றி கடுமையான மோதலாக மாறியது. இந்த நிலையில் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பர் மூலமாக மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியே இருளில் மூழ்கியது அந்த நேரத்தில் காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்கள், கம்புகளை கொண்டு திடீர் தாக்குதலில் ஈடுபட தொடங்கினர், இதனால் நள்ளிரவில் அப்பகுதி போர்க்களம் போல ஆனது. 

இதில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி விஜயகுமார், மேலூர் ஆய்வாளர் சார்லஸ், சார்பு ஆய்வாளர்கள் பழனியப்பன், சுதன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கார்த்திகை வள்ளி, சதுரகிரி  மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த  மூன்று காவல்துறை வாகனம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை உள்ளிட்ட வாகனங்களு ம் அடித்து நொறுக்கப்பட்டதில் சேதமாகின.

இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ் நிலை நிலவி வருகிறது, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவரது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுத் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண் கள் உட்பட சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT