தமிழ்நாடு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி

16th Mar 2021 12:11 PM

ADVERTISEMENT

 

சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இதற்காக திங்கள்கிழமை கோவை வந்த அவர் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மாலை ராஜ வீதி தேர் நிலை திடல் பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அவர் போட்டியிடும் தொகுதிக்கு உள்பட்ட பந்தய சாலை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் அங்கு நடைபெற்று வரும் பொலிவுறு நகரத் திட்டப் பணிகளைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதிக்கு வந்த அவர் ஆவின் பாலகம் அமைந்துள்ள இடத்தில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் கலந்துரையாடிய பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

இதன் பின்னர் 80 அடி சாலையில் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவர் துவங்கிய வீரமாருதி தேகப்பயிற்சி சாலை சென்றவர் அங்கு சிலம்ப பயிற்சி மேற்கொண்டவர்களுடன் பேசினார். பின்னர் அங்கு பயிற்சி மேற்கொண்டவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார். 

இதன் பின்னர் தேகப்பயிற்சி இடத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சின்னப்பா தேவருடன் உள்ள புகைப்படங்கள், ஷூட்டிங் நடந்தபோது எடுத்த புகைப்படங்கள் தேகப்பயிற்சி ஆண்டு விழா படங்களைப் பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT