தமிழ்நாடு

மாா்ச் 19-இல் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

16th Mar 2021 02:12 AM

ADVERTISEMENT

 

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 19-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வட வானிலையே நிலவும். தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 19-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் வட வானிலையே நிலவும்.

ADVERTISEMENT

சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT