சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வேட்பாளர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். மு.க.ஸ்டாலினிடம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துகள் பெற வைத்தார்.
அதைப்போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வேட்பாளர்களும் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.