தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் யுவராஜா (த.மா.கா. - அதிமுக) வேட்பு மனு

15th Mar 2021 06:07 PM

ADVERTISEMENT

 

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் கடந்த  மார்ச் 12 முதல் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜா கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம்  வேட்புமனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

வேட்பு மனுவின் போது ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ., தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Erode அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT