தமிழ்நாடு

ஏற்காட்டில் சித்ரா (அதிமுக) வேட்பு மனு

15th Mar 2021 02:31 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர், இன்று திங்கட்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

ஏற்காடு (எஸ்.டி) தனி தொகுதி அதிமுக வேட்பாளரான, இத்தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா இன்று திங்கட்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், தனித்துணை ஆட்சியர் முத்திரைத்தாள் பி.கே. கோவிந்தனிடம் பகல் 1.20 மணியளவில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

அவருடன் அயோத்தியபட்டினம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.பி. மணி, வழக்கறிஞர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக மாற்று வேட்பாளராக கு.சித்ராவின் கணவர் குணசேகரனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.என்.குணசேகரன் பாஜக கிழக்கு மாவட்டத்  தலைவர் க.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். 

முன்னதாக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான பாமக, பாஜக தொண்டர்கள் புடைசூழ, வேட்பாளர் ஊர்வலமாக வந்தனர். ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கு.சித்ரா முதலாவதாக வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT