தமிழ்நாடு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு

15th Mar 2021 03:57 PM

ADVERTISEMENT

 

சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். 

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் களம் காண்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியில் உதயநிதி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, எம்எல்ஏ என்பது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பதவி, நியமனப் பதவி அல்ல. வாரிசு அரசியல் என்று நினைத்தால் மக்கள் என்னை தோற்கடிக்கட்டும். 

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறினார். 

Tags : election 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT