தமிழ்நாடு

இதுவரை ரூ.109.45 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்: சத்யபிரத சாஹு

15th Mar 2021 01:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வாகனச் சோதனையில் இதுவரை ரூ.109.45 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரத சாஹு, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் ரூ.109.45 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல விரைவு அஞ்சல் மூலமாக சுமார் 4.69 லட்சம் வாக்காளர் அட்டைகள் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்களுக்கான அட்டைகள் இதுவரை 455 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி தீவிரமாகி வரும் வாகனச் சோதனையின் மூலம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.109.45 கோடி அளவிலான ரொக்கப் பணம், ஆபரணங்கள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63.20 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் ஆகியுள்ளன.

இதேபோன்று, உரிய ரசீதுகள், கணக்குகள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.43.67 கோடி ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.18 கோடி மதிப்பிலான மதுபானங்களும், சேலைகள், ஆடைகள், வெளிநாட்டு நாணயங்கள் வகைகளில் ரூ.1.04 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் ஆகியுள்ளன.

சோதனைகள் தீவிரம்: சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, வருமான வரித் துறையினா் மற்றும் நிலைகண்காணிப்பு, அதிரடிப் படை குழுவினா் தனித்தனியாக சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சோதனைகளின் மூலமாக தினமும் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு 20 நாள்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம், ஆபரணங்களின் மதிப்பு ரூ.109.45 கோடியைத் தாண்டியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT