வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று (மார்ச்.15)வேட்பு மனுத் தாக்கல் செய்தார் .
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான துரைமுருகனிடம் வேட்பு மனுவை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக திகழ்ந்த சர்தார் வேதரத்னத்துக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு தொகுதி மக்களின் சார்பில் வரவேற்று நன்றி தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.
வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் துரைமுருகனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.