தமிழ்நாடு

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் விஷ்ணுபிரசாத்

13th Mar 2021 09:30 PM

ADVERTISEMENT

சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் நடத்தி வந்த விஷ்ணுபிரசாத் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தரக் கூடாது என விஷ்ணுபிரசாத் எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை முதலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டு வாந்தார். 
அதேசமயம் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பினரும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் நடத்தி வந்த விஷ்ணுபிரசாத் போராட்டத்தை முடித்துக்கொண்டார். விஷ்ணுபிரசாத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர் போராட்டத்தை முடித்துக்கொண்டார். 
மேலும் எம்.பி. விஷ்ணுபிரசாத்தின் கருத்துகள் தலைமையிடம் சொல்லப்பட்டுள்ளது என்றும் தலைமை பரிசீலிக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags : congress
ADVERTISEMENT
ADVERTISEMENT