தமிழ்நாடு

உசிலம்பட்டியில் பி.கே. மூக்கையாத் தேவர் சிலை திறப்பு

13th Mar 2021 01:44 PM

ADVERTISEMENT


உசிலம்பட்டி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள உலையில், உசிலம்பட்டியில் பி.கே. மூக்கையாத் தேவர் சிலை திறக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே பி.கே.மூக்கையாத் தேவருக்கு துணை முதல்வர் ஒபிஎஸ் தனது சொந்த செலவில் நிருவப்பட்ட 6 அடி வெண்கல சிலை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சியினர் பி.கே.மூக்கையாத் தேவர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அப்போது அமமுக கட்சி வேட்பாளர் இ.மகேந்திரன் வரவேற்புக்கு மேள தளத்துடன் காத்திருந்த அமமுக கட்சி நிர்வாகிகளுடன் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT