தமிழ்நாடு

சாத்தூர் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதி அக்கா, தம்பி பலி

13th Mar 2021 11:36 AM

ADVERTISEMENT


சாத்தூர் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதியதில் அக்கா, தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்ன தம்பியாபுரத்தைச் சேர்ந்த பாண்டி(50), செல்வி(40). அக்கா, தம்பியான இவர்கள் சனிக்கிழமை காலை சின்னதம்பியாபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவில்பட்டி செல்வதற்காக பெத்துரெட்டிபட்டி நான்குவழிச் சாலையில் ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மதுரையிலிருந்து-திருநெல்வேலி நோக்கி சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT