தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஜி.கே.வாசன்

13th Mar 2021 07:24 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செலுத்திக் கொண்டாா்.
கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. 
அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் கரோனா முன்களப் பணியாளா்களான சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜன. 16-ஆம் தேதி முதல் நடைபெற்றது. இதன் பின்னர், பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்டோா், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. 
அதன்படி, நாட்டில் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வி.எஸ் மருத்துவமனையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கரோனா தடுப்பூசி இன்று செலுத்திக்கொண்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT