தமிழ்நாடு

நாமக்கல்லில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

13th Mar 2021 01:22 PM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு) தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. 
வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர்.என். ராஜேஷ் குமார் தலைமை வகித்து நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெ. ராமலிங்கம், ராசிபுரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் எம்.மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் கே. பொன்னுசாமி ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் மூன்று தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெற வேண்டும். கட்சியினர் பகைமையை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்வது பெற்றோருக்கு செய்யும் துரோகமாகும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சி தொண்டர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.  

 

ADVERTISEMENT
ADVERTISEMENT