தமிழ்நாடு

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி: பாஜக மூத்த தலைவர் தகவல்

13th Mar 2021 10:26 PM

ADVERTISEMENT


தமிழக பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் பட்டியலுடன் குஷ்பு பெயரும் விரைவில் அறிவிக்கப்படும். அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார். தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 வேட்பாளர்கள் பெயர் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நாளை மாலை இறுதி செய்யப்படும்."

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பாஜக மத்திய தேர்தல் குழு சனிக்கிழமை கூடியது.

ADVERTISEMENT

Tags : Khushboo
ADVERTISEMENT
ADVERTISEMENT