தமிழ்நாடு

மகா சிவராத்திரி: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

11th Mar 2021 10:07 AM

ADVERTISEMENT

மகா சிவராத்திரியையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ''அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகள். மகா சிவராத்திரி பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் திருமணத்தின் புனித நினைவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா மனித இனத்திற்கு பயனளிக்கக்கூடியது'' என்று பதிவிட்டுள்ளார்.

சிறப்பு மிகுந்த மகா சிவராத்திரி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
 

Tags : Narendra Modi
ADVERTISEMENT
ADVERTISEMENT