தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் மிதமான மழை

10th Mar 2021 06:21 PM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டையில் புதன்கிழமை மாலை பெய்த மழைக்கு, மலையரசன் கோவில் சாலையில் குடைபிடித்துச் செல்லும் பொதுமக்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. இதனால் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்த கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பத் தாக்கம் குறைந்து இதமான குளிர்ந்த தட்ப வெப்பம் நிலவியது.

அருப்புக்கோட்டையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாகக் கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் தட்ப வெப்பம் அதிகரித்து பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமையும் பிற்பகல்வரை கடும் வெயில் அடித்துவந்த நிலையில் அன்று மாலை சுமார் 3.30 மணிக்கு கருமேகங்கள் திரண்டன.

ADVERTISEMENT

பின்னர் மாலை சுமார் 4.45 மணிக்குத் தொடங்கித் தொடர்ந்து சுமார் அரைமணி நேரம் மிதமான மழை பெய்தது.சாலைகளில் வெள்ளநீர் திரண்டு ஓடியது. பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியது. இம்மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT