தமிழ்நாடு

திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு?

10th Mar 2021 09:28 AM

ADVERTISEMENT

 

திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட உள்ளன.

திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தங்களது சிங்கம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 173 ஆக இருக்கும். 

திமுக, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை:

திமுக 174
காங்கிரஸ் 25
மாா்க்சிஸ்ட் 6
இந்திய கம்யூனிஸ்ட் 6
மதிமுக 6
விசிக 6
முஸ்லிம் லீக் 3
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3
மனிதநேய மக்கள் கட்சி 2
தமிழக வாழ்வுரிமை கட்சி 1
ஆதி தமிழா் பேரவை 1
மக்கள் விடுதலை கட்சி 1

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT