தமிழ்நாடு

தமிழக-கேரள எல்லையில் கரோனா பரிசோதனை தொடக்கம்

10th Mar 2021 03:41 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லை கம்பம்மெட்டு மற்றும் லோயர் கேம்ப் பகுதிகளில் புதன்கிழமை மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கரோனா பரிசோதனை தொடங்கியது.

தற்போது கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ பாஸ் மற்றும் பரிசோதனை முக்கியம் என்று அரசு அறிவித்தது. அதன் பேரில் தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதிகளான லோயர்கேம்ப்பில் கூடலூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் கம்பம்மெட்டு பகுதியில் க.புதுப்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் சார்பிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

முகாம்களில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர். வருவாய்த்துறையினர் கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகளிடம்,  இ பாஸ் அனுமதி உள்ளதா என ஆய்வு செய்து பதிவேட்டில் பதிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுபற்றி வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் கூறும்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேலான ஆண், பெண் தொழிலாளர்கள்  கூலி வேலைகளுக்குச் சென்று வருகின்றனர். அவர்களைப் பரிசோதனை செய்ய இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை, அவர்கள் வழக்கம்போல் வேலைகளுக்குச் சென்று வரலாம் என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT