தமிழ்நாடு

அமமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

10th Mar 2021 09:42 AM

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 15 பேர் கொண்ட கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ராசிபுரம் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். அன்பழகன் போட்டியிடுகிறார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முன்னாள்  அமைச்சர் பி. பழனியப்பன், சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அரசு கொறடா மனோகரன், மடத்துக்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி. சண்முகவேலு, பொள்ளாச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுகுமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

மேலும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் - பாபநாசம் தொகுதியில் ரெங்கசாமி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உமாதேவன், வீரபாண்டியில் எஸ். கே.செல்வம், உசிலம்பட்டியில் மகேந்திரன், அரூரில் ஆர். ஆர், முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

ADVERTISEMENT

 

வேட்பாளர்கள்: 

ராசிபுரம் (தனி) - எஸ். அன்பழகன்
பாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன்
பாபநாசம் - பி.ரெங்கசாமி
சைதாப்பேட்டை - செந்தமிழன்
ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன்
மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
திருப்பத்தூர்(சிவகங்கை) - கே.கே.உமாதேவன் 
சோளிங்கர் - என்.ஜி.பார்த்திபன்
வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்
கோவை தெற்கு - துரைசாமி(எ) சாலஞ்சர் துரை
அரூர் - ஆர்.ஆர்.முருகன்
பொள்ளாச்சி - கே.சுகுமார்
புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்
தருமபுரி - டி.கே.ராஜேந்திரன்
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

Tags : election
ADVERTISEMENT
ADVERTISEMENT