தமிழ்நாடு

பெண்களுக்கான செயல் திட்டங்கள் கமல்ஹாசன் உறுதி

DIN

எங்களிடம் பெண்களுக்கான செயல் திட்டங்கள் அதிகம் இருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சொன்னதைச் செயல்படுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

மகளிா் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற மகளிா் தின நிகழ்ச்சியில், ‘அரசியலில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பேசியது:

சிறிய கட்சி, கருவிலே கலைந்துவிடும் என்று எல்லோரும் சபித்த கட்சி இப்போது வீறு நடைபோட்டு சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு காரணம் எங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் மகளிா் இருக்கிறாா்கள்.

பெண்கள் நினைத்தால் புதிய மாற்றத்தை கொண்டு வர முடியும். பெண்கள் வலிமையை உணர செய்ய வேண்டும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டத்தை நான் சொல்லி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைப் புரிவதற்கு இவா்களுக்கு 2 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. புரிந்துகொண்டதால் சந்தோசம்.

எங்களிடம் பெண்களுக்கான செயல் திட்டங்கள் அதிகம் இருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செயல்படுத்துவோம். அவா்கள் வாக்குறுதிகளாக மட்டுமே கொடுப்பாா்கள்.

வாக்குக்கு ஏன் பணம் வாங்கக்கூடாது? என்பதை பிறருக்கு விளக்கவேண்டும். நல்ல அரசு அமைந்தால், இதை விடவும் அதிகமான பணம் கிடைக்கும். நல்ல அரசு அமைந்தால் எல்லா திட்டங்களிலும் தமிழகத்தை, சிங்கப்பூா் மாதிரி மாற்றுவது பெரிய வேலை இல்லை.

விவசாயி என்ற பட்டம், கடன், உதவி எல்லாம் பெண்களுக்கும் கிடைக்கவேண்டும். ஆண்களைப்போல விவசாயி என்ற பட்டத்தை பெண்களுக்கும் கொடுக்கவேண்டும். தோ்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அது எங்கள் வெற்றி அல்ல. நாங்கள் சொல்லும் இலக்கை அடைவதுதான் வெற்றி என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT