தமிழ்நாடு

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயற்சி

DIN

திண்டுக்கல் மாவட்டம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

குஜிலியம்பாறை அடுத்துள்ள கரிக்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகன் சக்திவேல், மகள்கள் செல்வி, கலையரசு ஆகியோர் தங்களது குழந்தைகள் என 12 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்தனர்.

அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள புகார் பெட்டியில் மனுவை செலுத்திவிட்டு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினார். ஆனாலும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும் என சக்திவேல் குடும்பத்தினர் வலியுறுத்தினார். இதனிடையே, சக்திவேல் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், தீக்குளிப்பு முயற்சியிலிருந்து சக்திவேலை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். 

இதுதொடர்பாக காவல்துறையிடம் சக்திவேல் கூறியதாவது:

கரிக்காலி எல்.புதூர் பகுதியில் வசித்து வந்த எங்கள் பெரியம்மா சகுந்தலா என்ற மாரிம்மாள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார். அவரது வாரிசு நான்(சக்திவேல்), செல்வி மற்றும் கலையரசி ஆகியோர் மட்டுமே என வேடசந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன் மூலம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்று பெற்றுள்ளோம். இதனை அடுத்து சகுந்தலாவின் பெயரிலிருந்த 6.30 ஏக்கர் நிலம், கூட்டுப் பட்டாவாக எங்களது பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், எங்களது உறவினர் குருமூர்த்தி, அர்ஜூன் ஆகியோருக்கு ஆதரவாக, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், குஜிலியம்பாறை வட்டாட்சியரிடம் பட்டா மாறுதல் ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எங்கள் பெயருக்கு மாறுதல் செய்யப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டனர். 

இதுகுறித்து வட்டாட்சியர் சிவபாலனிடம் கேட்டால் எம்எல்ஏ சொல்வதைத்தான் செய்வோம் என கூறிவிட்டனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, எம்எல்ஏ பேச்சைக் கேட்டு பட்டாவிலிருந்து பெயர் நீக்கம் செய்த வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமியை சந்தித்து புகார் அளிப்பதற்காக சக்திவேல் குடும்பதினரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT