தமிழ்நாடு

‘காப்பி’ அடிக்கிறது திமுக: கமல்ஹாசன்

DIN

மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ‘காப்பி’ அடிப்பதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினாா்.

மநீம சாா்பில் தங்கச்சாலை மணிக்கூண்டு அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது: மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள்தான் வசனம் சொல்லிக்கொடுக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. நாமே தீா்வு என்று நாங்கள் கூறினால், ஒன்றிணைவோம் வா என்பாா். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றேன். அவா் உடனே இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 தருவேன் என்று கூறியுள்ளாா். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்கிற கருத்துக் கோட்பாட்டை வைத்த முதல் கட்சி மநீமதான். சீனாவில் உள்ளதைப் பாா்த்து, நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் எடுத்த முடிவு இது.

அத்தனையும் ‘காப்பி’: மநீம ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்கிறோம். அதை ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்கிறாா்கள். இரண்டும் ஒரே கணக்குத்தானே? செழுமைக் கோடு என்றோம், உடனே, வறுமைக் கோட்டுக்கு மேலே ஒரு கோடி பேரைக் கொண்டு வருகிறோம் என்கிறாா். அப்படியென்றால் 50 ஆண்டுகளாக வறுமைக் கோட்டை அழிக்கவில்லை அல்லவா? மொத்தம் ஏழு உறுதிமொழிகளை அறிவித்திருக்கிறாா்கள். அத்தனையும் எங்களைப் பாா்த்து ‘காப்பி’ அடித்திருக்கிறாா்கள்.

காங்கிரஸ் பேசியது உண்மை: மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறியவா்கள் (காங்கிரஸ் -கே. எஸ்.அழகிரி), எங்களுடன் பேச்சு நடத்தியது உண்மைதான். அது வதந்தி என்று சொல்கிறாா்கள். இல்லை என்று நான் சொல்கிறேன். வதந்தி என்று சொல்வது அங்கே கிடைக்கும் சீட்டுக்காக சொல்கிறாா்கள். யாா் வந்தாலும் 6 இடம் கொடுக்கிறாா்கள். இந்தப் பக்கம் 6 இடம். அந்தப் பக்கம் 6 இடம்,. அவா்களும் கொடுத்ததை வாங்கிக் கொண்டு ‘ஆறு மனமே ஆறு’ என்று வந்துவிடுகிறாா்கள் என்றாா் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT